"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, October 25, 2013

இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்

இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வேணுநாதர் என்ற பெயருண்டு. ஆம்! இந்த வேணுநாதர் ராமக்கோன் என்பவருக்குக் காட்சி அளித்தார்.ராமக்கோன் தனது மாட்டுக் கொட்டகையில் சென்று பால் கறந்து பாலை வெளியே கொண்டு சென்ற பொழுது தினமும் சொல்லி வைத்தாற்போல ஒரு மூங்கில் புதர் அருகே வந்ததும், கையில் இருந்த பால் சிந்துவதும் வழக்கமாக இருந்தது. ஒருநாள் புதரை வெட்டி அகற்ற முற்பட்ட போது, அதன் தலையில் வெட்டுப்பட்ட சுயம்பு மூர்த்தி ஒன்றைக் கண்டார். இதுவே இன்றும் நாம் வணங்கும் நெல்லையப்பர் எனும் வேணுநாதர் ஆவார்.
“இராமன் இலங்கைக்குச் செல்லும் போது இந்த நெல்லையப்பரை வணங்கி விட்டுத்தான் சென்றார்” என்று கோவில் புராணம் கூறுகிறது. ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது? இராமபிரானுக்கு முன்னரே இராமக்கோன் பிறந்துள்ளார் என்பது தெரிகிறதல்லவா!

(ஆதாரம்:’குமுதம்’ பக்தி ஸ்பெஷல்-தகவல் திசைமுத்து)

நன்றி
யாதவர் களஞ்சியம் (ச.சி.செல்லம்)

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar