"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, March 12, 2014

ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை

வரலாறு
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர். அன்றிலிருந்து அந்த இடத்தை ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் அடைப்பதற்கும், ஆடுகள் வியாபாரம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கி.பி.1924 ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியபட்டது என தீர்ப்பளித்தது. வழக்கை தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என்று  தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்தவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இந்த முறை இரு தரப்பாரும் கலந்து பேசி சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை டிரஸ்ட் கி.பி.1927 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டிரஸ்டியாக திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1927 முதல் கி.பி 1947 வரை டிரஸ்டியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் டிரஸ்டியாக இ.சுடலைமாடக்கோனார் கி.பி 1947 முதல் 1953 வரை பணியாற்றினார். பின்னர் மூன்றாம் டிரஸ்டியாக வீ.சி.பி.வீரண்ணக்கோனார் கி.பி 1953 முதல் 1988 வரை பணியாற்றினார். பின்னர் நான்காம் டிரஸ்டியாக மா.வ. சுப்ரமணியக்கோனார் கி.பி 1988 முதல் 2000 வரை பணியாற்றினார். பின்னர் ஐந்தாம் டிரஸ்டியாக நா.ஆறுமுகம் கி.பி 2000 முதல் 2010 வரை பணியாற்றினார். பின்னர் ஆறாம் டிரஸ்டியாக வீ.க.து.முருகேசன் (எ) வீரணன் கி.பி 2010 முதல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இறைப்பணிகள்
பக்தியில் சிறந்த ஆயிர வீட்டு யாதவ சமுதாய மக்கள் டிரஸ்ட் மூலமாக இறைத்தொண்டாற்றிட எண்ணினர். அதன்படி வடக்கு மாசி வீதி நவநீதகிருஷ்ணன் கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவத்தை டிரஸ்ட் சார்பில் நடத்துவதாக முடிவு செய்தனர். அதன்படி அன்று முதல் இன்று வரை நவநீதகிருஷ்ணன் கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவம் டிரஸ்ட் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஃபாத்திமா கல்லூரி அருகில் உள்ள வழி விடும் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அன்று ஒரு நாள் மட்டும் பெருமாள் விக்ரகத்தைத் தொட்டு பூஜை செய்பவர் ஆயிர வீட்டு யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். சில தலைமுறைகளுக்க்கு முன் ஆயிர வீட்டு யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து நரசிங்கபெருமாள் விக்ரகத்தை கண்டெடுத்து, அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிவிடும் பெருமாள் கோவிலை உருவாக்கினார். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மட்டும் பெருமாளைத்தொட்டு பூஜை செய்து வருகின்றனர். தற்போது விக்ரகத்தை கண்டெடுத்த ஆயிரம் வீட்டு யாதவரின் பேரனாகிய மங்கான் பெரியசாமி யாதவ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அன்று ஒரு நாள் மட்டும் கோவிலில் வழக்கமாக பூஜை செய்து வரும் பிராமணர் பூஜை செய்வது இல்லை.

டிரஸ்டிக்களின் காலமும், பணிகளும்
      காலம்                   டிரஸ்ட் தலைவர்
  1. கி.பி.1927 - 1947                   வெ.பெ.இருளப்பக்கோனார்
ஆட்டு மந்தை டிரஸ்டை உருவாக்கினார்
  1. கி.பி.1947 – 1953                  இ.சுடலைமாடக்கோனார்
                             சுற்றுப்புற கோட்டைச் சுவரைக் கட்டினார்
                             தரையில் பட்டியல் கல் பாவினார்        
  1. கி.பி.1953 – 1988                  வீ.சி.பி.வீரண்ணக்கோனார்
       இவர் காலத்தில் கி.பி.1957 ல் வெள்ளிக்குதிரை
       வாகனம் செய்யப்பட்டது.
  1. கி.பி.1988 – 2000                  மா.வ.சுப்ரமணியக்கோனார் 
இவர் காலத்தில் கி.பி.1999 ல் ஆட்டு மந்தை திருமண       மண்டபம் கட்டப்பட்டது.
  1. கி.பி.2000 – 2010                  நா.ஆறுமுகம்
இவர் காலத்தில் கல்யாண விநாயகர் ஆலயம்,  பழனிசாமி மடம் கும்பஷேகம் செய்யப்பட்டது   
  1. கி.பி.2010 – தொடர்ந்து        வீ.க.து.முருகேசன் (எ) வீரணன்
சமுதாயப்பணிகள்
ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபம், யாதவர் வீட்டு விசேஷங்களுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்படுகிறது. இதில் ஆயிர வீட்டு யாதவர், மற்ற யாதவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து யாதவர்களுக்கும் மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி நான்கு புறமும் பாதை உள்ள இடம் ராஜமனை எனப்படும். இவ்வாறு அமைந்த இடம் செல்வத்திலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்கும். ஆட்டு மந்தை டிரஸ்ட் இத்தகைய ராஜமனை என்ற அமைப்பில் நான்கு புறமும் பாதையுடன் அமைந்துள்ளது.
இந்த டிரஸ்ட் இப்பொழுது டிரஸ்டி வீ.க.து.முருகேசன் (எ) வீரணன் ( Cell No.9842996663 ) நிர்வாகத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar