"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, January 7, 2015

சாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: யாதவர் எழுச்சி மாநாட்டில் தீர்மானம்



சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய யாதவர் எழுச்சி மண்டல மாநாடு (5/1/2015) மாநாடு நடந்தது.

தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம். கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை தாங்கினார். பூவை பா.சேகர் வரவேற்றார்.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிக குறைவாக இருந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினை மக்களுக்கு 7 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 20 சதவீதத்தில் 140 சாதிகளுக்கு மேல் உள்ள மக்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது தமிழக மக்கள் தொகையில் 70 சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
தமிழகத்தில் உண்மையான சமூக நீதி நிலை நாட்டிட சாதிவாரியாக கணக்கெடுத்து விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி சமநீதி கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசின் காவல் துறை, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிகளான அட்வகேட் ஜெனரல் பப்ளிக் பிராசிகயூட்டர் ஆகியவற்றில் தற்போது யாதவ இன மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால் மற்ற இனமக்களுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தை போல் எங்கள் யாதவ் இனத்தை சார்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து உரிய பிரதிநித்துவம் வழங்கிட வேண்டும்.
இந்திய சுதந்திரத்திற்கு முதல் குரல் கொடுத்தும் தன் இன்னுயிரையும் ஈந்த மாவீரன் அழகுமுத்துக்கோன் வாழ்ந்த இடமான தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் கட்டிய கோட்டை சிதறுண்டுள்ளதை புதுப்பித்து வரலாற்றை போற்றி பாதுகாக்கும் வரலாற்று பெட்டமாக மாற்றி அமைத்து சுற்றுலாத்தலமாக உருவாக்கிட வேண்டும்.

தமிழக அரசு ஆண்டு தோறும் நடத்தும் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள்விழாவில் நெல்லை, தூத்துக்குடி பகுதியை சார்ந்த, அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை பங்கு பெற வாய்ப்பளிக்குமாறு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அழகு முத்துக்கோன் தபால் தலை வெளியிடுமாறு மத்திய அரசை விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசியலில நாடாளுமன்ற, சட்டமன்ற, மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் யாதவ இனத்தவருக்கு முக்கியம் அளித்து உரிய பங்கினை அளிக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஆடு, மாடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து அதற்கு யாதவர் ஒருவரை தலைவராக நியமனம் செய்து யாதவர்கள் பயன்பெற ஆவண செய்யுமாறு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசு போதுமான விளைச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும், வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடியை தவிர்க்கவும் ஆவண செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநாட்டில் முன்னாள் அமைச்சர்

பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், வைத்தியலிங்கம், குழந்தைவேலு, நந்த கோபால், சுப.சீத்தாராமன், மலேசியா பாண்டியன், நாசே.ஜே.ராமச்சந்திரன், முன்னாள் துணை வேந்தர் திருவாசகம், கவிஞர் விவேகா . ஒருங்கிணைப்பாளர் எத்திராஜ் மாநாட்டு ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் பூவை மாதவன், கே.எத்திராஜ், சங்கர், ராஜீ, கே.கே.நகர் கே.ஜோதிலிங்கம், கி.கோபி, பி.ராமதாஸ், ஆறுமுகம், பஞ்சாட்சரம், என்.தேவதாஸ், கே.சேகர், புண்ணியசேகர், பழனி யாதவ், மெய்யப்பன், கைலாசம் அசோக்குமார், செல்வன் யாதவ், ஆத்மசுப்பு, அரங்கநாதன், கே.நாராயண மூர்த்தி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வீரன் அழகுமுத்துக்கோன், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, ராவ் பிரேந்திர சிங் உள்ளிட்ட 54 பேரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar