"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, July 13, 2015

விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும்:மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில், அழகுமுத்துக் கோனின் 256 ஆவது நினைவு நாள் விழா, மதுரை யாதவர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பொன். ராதாகிருஷ்ணன் மேலும் பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு இந்தியா. ஆனால், 200 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை மட்டுமே நாம் நினைவில் கொண்டுள்ளோம். சுதந்திரப் பெருமைகளை மறந்தால், நம் நாடு மீண்டும் அடிமைப்பட வாய்ப்புண்டு. அதனால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூருவது அவசியம்.

முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் 256-வது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள யாதவர் தன்னுரிமை பணியகத்தில் நேற்று அவரது வரலாற்று ஓவியங்களைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். 
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளிகள் தேசிய அளவில் போற்றப்படுவது இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்றார்.

பின்னர், வீரர் அழகுமுத்துக் கோன் பற்றிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு யாதவர் மகாசபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவர் எஸ். சுரேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் ஐ.எஸ். முத்தண்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar