"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Sunday, November 22, 2015

முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க(R.C) நடுநிலைப் பள்ளியிலும்,ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல்(கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர். 

1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர். 


எழுதிய நூல்கள்: 1. அந்தமானைப் பாருங்கள் 2. பாவேந்தர் கனவு 3. வாழ்ந்து காட்டுங்கள் 4. காலம் எனும் காட்டாறு 5. பாவேந்தரின் மனிதநேயம் 6. ஐரோப்பியப் பயணம் 7. மனம் கவர்ந்த மலேசியா 8. கலைஞரும் பாவேந்தரும் 9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு? 10. சீன நாடும் சின்ன நாடும் 11. மலேசிய முழக்கம் 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்) 


இதழ்ப்பணி:
துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966) 
ஆசிரியர்- அறிவு(1970-1971) 
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)

சமுதாயப்பணிகள்: 

பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்

அரசியல் பணி: 
1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர்.

1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், 

பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர். 


தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார்.

1989 முதல் 1991 வரை தமிழக சட்டபேரவை தலைவராக பணியாற்றினார்.


1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார்.

2 comments:

  1. பெருமைக்குரிய மாமனிதர் அய்யா தமிழ் குடிமகன்

    ReplyDelete
  2. பெருமைக்குரிய மாமனிதர் அய்யா தமிழ் குடிமகன்

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar