"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label இடையன். Show all posts
Showing posts with label இடையன். Show all posts

Friday, August 21, 2015

ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன்

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.

மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக இருந்தது. பெரிய விலங்குகளை வளைத்து வேட்டையாடக் “கூட்டு வேட்டையும்“ தேவைப்பட்டது. வேட்டைக்காக இணைந்த மக்கள் தங்களுக்குள் வேட்டைப் பொருளினை ஓரளவிற்குச் சமமாகவே பகிர்ந்துகொண்டனர். ஆக, அக்காலத்திலே “பங்கீடும்“ அவர்களிடையே உருப்பெற்றுவிட்டது.

வேட்டையிலிருந்து வளர்த்தலுக்கு

வேட்டை உணவினை நாளும் தேடி அலையாமல் அவ் உணவினைத் தாமே பேணிப் பின் உண்ணும் திட்டம் காலச்சூழலில் ஏற்பட்டது. அவர்களின் வளர்ப்பு விலங்குகளாகப் பசுக்கள் இருந்தன.ஆடுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் பசுக்கள் அளவுக்கு முதன்மையாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலுமாக வேட்டையைக் கைவிட்டு, தம் உணவினைத் தாமே வளர்க்கத் தொடங்கினர். அவற்றை மேய்ப்பதே அவர்களின் தொழிலாகியது. அவர்கள் பயறு, வரகு, தினை, கொள், அவரை, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பசுக்களை வளர்க்கும் கூட்டங்கள் பெருகித் தனித்தனியே
வாழத்தொடங்கியன. அக்கூட்டங்களுக்குரிய உடைமைப் பொருளாகப் – சொத்தாகப் பசுக்களே இருந்தன. ஆதலால்தான், “மனித குலத்தின் முதல் உடைமை பசுக்கள்“[1] என்று வெ.மு. ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளார். அவையே அவர்களின் அசையும் சொத்து. அவர்களின் பொருளாதாரமும் உணவாதாரமும் அவையே. அவற்றால் கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வளங்களும் (பால் உட்பட பிற அனைத்தும்) அவர்களுக்கு முதன்மையாக இருந்தன. ஆதலால், அச்சமூகச் சூழலில் பசுக்கள் முதன்மையிடத்தினைப் பிடித்தன.

வேட்டையிலிருந்து கொள்ளைக்கு

வேட்டையை மறக்காத அதாவது, வளர்த்தலில் நாட்டமில்லாத கூட்டம் வேட்டையைக் கொள்ளையாக மாற்றிக்கொண்டது. இது, மனிதகுல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை. சில வேடர்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தமைகான சிறு தடயங்கள் புறநானூற்றின் 323 மற்றும் 325 ஆம் பாடல் அடிகளில் காணப்படுகின்றன. அவர்கள் தோரை, ஐவனம், தினை ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்பர். (ஆ – பசு. நிரை – கூட்டம்). ஆநிரைகளைக் கவரும் (திருடும்) கூட்டங்களும் (வேடர்) ஆநிரைகளை வளர்க்கும் கூட்டங்களுக்குச் (ஆயர்) சம அளவிலும் அவர்களுக்கு எதிர்நிலையிலும் இருந்தன. ஆயர் கூட்டத்தினர் காடுகளிலும் (முல்லைத்திணை), வேடர் கூட்டத்தினர் மலைகளிலும் (குறிஞ்சித்திணை) தங்களின் முகாம்களை அமைத்துக்கொண்டனர்.

பசுக்களைக் கொள்ளையடித்தவர்கள் மழவர், மறவர், எயினர், வேடர், குறவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும் பசுக்களை வளர்த்தவர்கள் ஆயர், கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும்ச் சங்க இலக்கிய அடிகள் சுட்டியுள்ளன.

பசுக்களை வளர்த்த இக்கூட்டத்தாருக்குள்ளும் பசுக்களைக் கொள்ளையடிக்கும் வழக்கமும் இருந்துள்ள தகவலைப் புறநானூறு 257ஆவது பாடல் தெரிவித்துள்ளது. “உடைமை“ என்று வந்தபின்னர் அதனை எப்படியாவது அபரிமிதமாகப் பெருக்கும் போக்குகளுள் ஒன்றாகத்தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.

திருடுதலும் தடுத்தலும் (அல்லது) மீட்டலும்

வேடர்கள் ஆநிரைகளைத் திருடவருதலும் அவர்களிடமிருந்து அவற்றை ஆயர்கள் காத்தலும் ஆகிய இவ் இரு நிலைகளும் சங்கத்தமிழரின் தொடக்கக் காலத்தில் தவிர்க்கமுடியாத வாழ்வியல் நிகழ்வாக இருந்தன.

பின்னாளில், இத்திருட்டு (கொள்ளை) வீரம் சார்ந்ததாகக் கருதப்பட்டது. திருடுதலும் திருட்டினைத் தடுத்தலும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டலும் வீரமாகவே போற்றப்பட்டன. திருடுதலை வெட்சித்திணை என்றும் திருட்டினைத் தடுத்தலை அல்லது பறிகொடுத்த ஆநிரைகளை மீட்டுவருதலைக் கரந்தைத்திணை என்றும் தமிழர்கள் புறத்திணைகளை வகுத்து வளர்த்தனர். இப்பாகுபாடு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பிற்கால இலக்கணநூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

களவும் கற்பும்

ஒவ்வொரு திணைக்கும் (திணை – ஒழுக்கம்) அகம், புறம் என்ற இரண்டு இணையான செயல்படு ஒழுக்க நிலைகள் உண்டு. அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழு. குறிஞ்சித்திணைக்கு ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணின் மனத்தினைக் களவாடுதல் (களவு – திருட்டு) அகத்திணையாகவும் உணவுக்காகப் பிறர் வளர்க்கும் ஆநிரைகளைக் களவாடுதல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

முல்லைத்திணைக்குப் பெண் தன் கற்பினைக் காத்தல் (காத்தல் – பேணுதல்) அகத்திணையாகவும் தம் பொருளாதாரமான ஆநிரைகளைக் காத்தல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

குறிஞ்சி என்ற அகத்திணைக்கு வெட்சி என்ற புறத்திணையை இணையாகக்கொள்வது தமிழர் வழக்கம். அதனைப் போலவே முல்லை என்ற அகத்திணைக்குக் கரந்தை என்ற புறத்திணை இணையாகக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

திருட்டும் வீரமும்

வேடர் முதலான இனக்குழு மக்கள், ஆயர் முதலான இனக்குழு மக்கள் மேய்க்கும் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துத் திட்டமிட்டுக் கூட்டமாகச் சென்று திருடும் அல்லது கொள்ளையிடும் வழக்கத்தில் சங்கத் தமிழரின் உடல்வலிமை வெளிப்படுத்தப்படுவதால் இது அக்காலத்தில் வீரமாகவே கருதப்பட்டது.

ஒரு வகையில் இதனைக் “கூட்டுவேட்டை“ என்று தமிழாய்வாளர்கள் கூறிக்கொண்டாலும் என் கணிப்பில் இது திருட்டுதான் – கொள்ளைதான்.

இத்திருட்டினைத் தடுப்பவர்களை அல்லது தங்களது ஆநிரைகளை இழந்தவர்கள் அவற்றை மீட்கப்போராடுவதனை வீரம் என்று கொள்ளலாம்.

சங்க இலக்கிய அடிகள் இத்திருட்டினை “ஊர்ப்பூசல்“, “ஆகோள்“, “ஆகோள் பூசல்“ என்று சுட்டியுள்ளன. அதாவது, “சண்டை“ என்ற பெயரில். இது போர் அல்ல.

இத்திருட்டினை நடத்தத் தலைமைதாங்கும் இனக்குழுத்தலைவனை “உரையன்“, “நெடுந்தகை“, “மதவலி“ என்று சங்க இலக்கிய அடிகள் அழைத்துள்ளன. இத்திருட்டிற்குத் துணைபோகும் வேடர்களை “மீளியாளர்“ என்றும் இத்திருட்டினைத் தடுக்கும் ஆயர்களை “மறவர்“ என்றும் அவ் இலக்கிய அடிகள் குறிப்பிட்டுள்ளன.

திருடலாம்

வேடர் இனக்குழு ஆண்கள் இத்திருட்டு நடவடிக்கைக்கு ஆயத்தமாவது குறித்துச் சங்க இலக்கிய அடிகள் பல உள்ளன. இவர்கள், காரை மரத்தின் பழம் போல் விளைந்த கந்தாரம் குடித்து, பச்சை இறைச்சி (பச்சூன்) அதாவது, அன்று கொல்லப்பட்ட விலங்கின் தசையை உண்டு, மது அருந்தி தெம்பாகச் சென்றுள்ளனர்.(புறநானூறு – 258, 269.) ஒருவிதத்தில் இது அவர்களுக்கு இறுதி உணவாகக் கூட இருக்கலாம் அல்லவா? கொள்ளை நிகழ்ச்சியில் இவர்கள் பிடிபட்டு இறக்கவும் வாய்ப்புள்ளதே!

திருடும் வெட்சியினர் வில்லையும் அம்பினையும் பயன்படுத்தியுள்ளனர். (புறநானூறு–259.) இவர்கள் பசுக்களைக் கொள்ளையடித்து வெற்றியுடன் வரும்போது அதனைக் கொண்டாடுவதற்காக, கொள்ளையடித்துக் களைத்துவருபவர்களுக்கு வழங்குவதற்காக முதிய சாடியில் “கள்“ நிறைத்து வைத்துள்ளனர். (புறநானூறு – 258.) அதுமட்டுமல்ல, தங்கள் (கொள்ளைத்) தலைவனை வரவேற்க ஊரில் பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, கள், இறைச்சி படைத்துள்ளனர். துடிப்பறையை முழக்கயுள்ளனர்.

அக்காலத்தில் விழா கொண்டாடப் “புதுமணல் பரப்பும் வழக்கம்“ இருந்துள்ளது. அக்காலத் திருமணம் பற்றிக் கூறும் அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்களில் புதுமணல் பரப்பும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் கொள்ளையை விழா போலக் கொண்டாடியுள்ளனர்.

வெட்சியினர் நள்ளிரவில் பதுங்கிச்சென்று ஆநிரைகளைக் களவாடி விடிவதற்குள் தம் இருப்பிடத்திற்கு வந்துசேர்கின்றனர். வந்தவுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து.

ஒன்று – தன்னை நம்பியிருக்கும் கூட்டத்திற்கும் தன்னோடு திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் உள்ள உணவுத்தேவைகளை உடனே பூர்த்திசெய்யும் உபசரிப்பு எண்ணம்.

இரண்டு – கொள்ளையடித்து வந்த ஆநிரைகளை மீண்டும் கூட்டமாக வைத்திருந்தால் கரந்தையர் வந்து அவற்றைக் கைப்பற்றிச் செல்ல எளிதாகிவிடும் என்ற எச்சரிக்கை எண்ணம்.

மீட்கலாம்

கொள்ளையடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்டுவரச் செல்லும் ஆயர் வீரனுக்கு ஆயர் குழுவினர் “கரந்தைமாலை“யை அணிவித்து அனுப்புவதனைப் புறநானூறு – 280 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

திருட்டினைத் தடுக்கும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டுவரும் கரந்தையினர் வாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூறு 259ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

அவன் அப்போரில் வீரமரணமடைந்துவிட்டால் அவனுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்குப் “படலை மாலை“யைச் சூட்டி வழிபடும் மரபு இருந்துள்ளது. புறநானூறு – 265.

அறிவொளி

வெட்சியினரான வேடர்களைக் கல்வியறிவற்றவர்களாகப் புறநானூறு 263ஆவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது. அப்படியென்றால், கரந்தையினர் கல்வியறிவுடையவர்களா? ஆம். அவர்கள் ஆநிரையைக் காக்க அல்லது பறிகொடுத்த ஆநிரையை மீட்டுவர நிகழ்த்தப்பட்ட கரந்தைப் பூசலில் உயிர்துறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். (புறநானூறு – 260) அந்த நடுகல்லில் இந்த நபர், இந்த இடத்தில், இவர்களுடன் நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணமடைந்தார் என்ற செய்தியினைத் “தமிழி“ எழுத்தில் எழுதியுள்ளனர். (புறநானூறு – 260). இவற்றைப் பற்றி ராஜ் கௌதமன், “பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்பட்ட அம்சம் போலத் தெரிகிறது“[2] என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து இந்த முறை தொடர்ந்து வந்துள்ளது. முடிமன்னர் காலத்தில் இது சடங்காக மாற்றப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.

திருடுதல் ஒரு சடங்காக மாற்றப்படுதல்

இனக்குழு நிலை நலிவடைந்து அதாவது, பெருங்கற்கால நாகரிக எச்சங்கள் முற்றிலும் மறைந்து முடிமன்னராட்சி மலர்ந்தபோது, இத்திருட்டும் திருட்டினைக் காத்தலும் அல்லது பறிகொடுத்த பசுக்கூட்டத்தை மீட்டலுமாகிய வெட்சியும் கரந்தையும் பெரும்போருக்கு முன் நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகக் கைக்கொள்ளப்பட்டன.

இங்குப் பசுக்களைத் திருடுதல் “கவர்தல்“ என்ற சொல்லாலும் பசுக்களைக் கவரச்செல்லும் வீரர்கள் வெளிப்படுத்தும் வீரம் பூசல் என்று அழைக்கப்படாமல் “போர்“ என்ற சொல்லாலும் புலவர் மரபினரால் குறிக்கப்பட்டுள்ளன.

அதாவது, முடிமன்னர்கள் வேடர் முதலான இனக்குழு மக்களின் தலைவர்களை அழைத்து தம் எதிரி நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர (கொள்ளையிட) ஆணையிட்டுள்ளனர். இதற்கு, “வேந்து விடு தொழில்“ என்று பெயர். “பெரும்போரில் ஆநிரைகள் அழியாமல் காத்தல் வேண்டும்“ என்ற உயிர்நேய நோக்கோடு அச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்று கருதவேண்டும்.

அச்சடங்கின் ஒரு பகுதியாகப் பசுக்கூட்டத்தினைக் கவரச்செல்லும் (திருட்டு அல்ல) வீரர்கள் வெட்சிப்பூவையும் திருட்டினைக் காக்கும் அல்லது திருடப்பட்ட பசுக்களை மீட்கும் வீரர்கள் கரத்தைப்பூவையும் சூடும் வழக்கம் ஏற்பட்டது. இவை அச்சங்கிற்கான அடையாளப் பூக்களாக மாறின.

முடிமன்னர்கள் வெட்சிவீரர்கள் கைப்பற்றி வந்த பசுக்கூட்டங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல் வெட்சித்தலைவனுக்கும் அவனோடு சென்று வெட்சிப் போரினை (இது பூசல் அல்ல) நிகழ்த்த உறுதுணையாக இருந்த வெட்சிவீரர்களுக்கும் அவர்களுக்குரிய வரிசை அறிந்து பங்கிட்டுக்கொடுத்தனர். இது அவர்களுக்குரிய பரிசு அல்ல ஊதியம் என்று கருதவாய்ப்புள்ளது. அதாவது இத்தகைய இனக்குழு வீரர்களைத் தமது அடியாட்களாக மட்டும் (படைவீரர்களாக அல்ல) முடிமன்னர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

மார்க்ஸிய நோக்கில் இந்த வெட்சி வீரர்களின் வாழ்க்கையை ஆராயும்போது, இவர்களின இந்நிலைக்கு “உடைமைச் சமூகத்தின் பேராசையே காரணம்“ என்று எண்ணத்தோன்றுகிறது. மலைகளில் வேட்டையாடும் வேடர்கள் காடுகளில் கொள்ளைக்காரர்களாக மாறி, பின்னர் முடிமன்னர்களுக்கு அடியாட்களாக மாறிவிட்டது காலப்பிழைதான்.

– – –
ஷாஜகான் கனி, வெ.மு., “மனிதகுல வரலாறும் தொல்காப்பியமும்“, ஆய்வுக்கோவை – 2006, ப. 2346.
ராஜ்கௌதமன், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்,ப.13.

Wednesday, August 19, 2015

பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.

இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)

ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’

என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar