"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label கோனார்களும் குமரிகண்டமும். Show all posts
Showing posts with label கோனார்களும் குமரிகண்டமும். Show all posts

Monday, June 29, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 3( ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்)



ஆயர்களே  ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்:

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)


ஒரு முழுமை அடையாத வாக்கியம் இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.அந்த இரண்டு வரிகள் குமரிகண்டம் பற்றி கலித்தொகை கூறுவது.

இந்த வரிகள் முழுமை அடைந்தால் குமரியில் வாழ்ந்த மக்கள் யார்? என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ஒரு சிலர் முற்றுபெறாமல் நிருத்திவிட்டனர்.
முழுமை பெரும் அந்த வரிகள்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”
(கலித். 104)

தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர் என்று தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.3 ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)- நல்லுருத்திரனார்

இதன் மூலம்  ஆயர்களே  ஆதி தமிழர்கள் கோனார்களே குமரியில் வாழ்ந்தவர்கள் நிருபிக்கபடுகிறது.

ஆயர்களே  ஆதி தமிழர்கள் கோனார்களே குமரியில் வாழ்ந்தவர்கள் என கூறாமல் மறைக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாற்றை  மறைக்க  ஏன் இத்தனை பேர் முயல்கின்றனர்.?

கிழே உள்ள படங்களில் உள்ளது குமரிக்கண்டம் பற்றிய தொகுப்பு.



வந்தேரிகள் தங்களை தமிழர்களாக காண்பிக்க பூர்வீக தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்றனர் என்ற என்ன தோன்றுகிறது.
இனியாவது இடையர் குலம் தன் அடையாளங்களை இழக்காமல் பாதுகாக்குமா என்பது காலம் தான் பதில் சொல்லும்.



தொகுப்பு
திருவண்ணாமலை தாமோதரன் கோனார்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar