"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Sunday, February 26, 2017

பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பேராசிரியர் வள்ளி கூறியதாவது: ராமேசுவரத்துக்கு அன்றைய கால கட்டங்களில் சேது யாத்திரையாக பக்தர்கள் வந்து சென்றனர். போக்குவரத்து வசதிகளும், தங்கும் இடமும் அவ்வளவாக இல்லாத அக்காலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆங்காங்கு சத்திரங்களையும், மடங்களையும் கட்டிக் கொடுத்தனர். செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த கோபாலமடம் சுந்தரபாண்டியபட்டினத்துக்கும், தீர்த்தாண்டதானத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இம்மடத்திற்கு அருகிலேயே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயிலும் உள்ளது. சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி, பெருமாள் கோன் என்பவருக்கு தீர்த்தாண்டதானத்திற்கு வடக்கில் ஒரு மடம் கட்டிக் கொள்ள அனுமதியளித்து செப்புப் பட்டயம் கொடுத்துள்ளதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த இடையன்வயல் கோபாலமடத்தையும், ராமர் பாதம் உள்ள கோயிலையும் மீண்டும் புதிப்பித்து தர வேண்டும் என்பது பெருமாள் கோனின் 6-ஆவது தலைமுறையினராக தற்போது வசித்து வரும் பாண்டி, குமார் மற்றும் இவர்களது பெரியப்பா மகன் சந்திரன் ஆகியோரின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், 17 ஆம் நூற்றாண்டில் இந்த பணியினை எங்கள் முன்னோர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைக்கு செப்பேட்டில் உள்ளது போன்று எதுவும் இல்லாத நிலையில், எங்களது முன்னோர்களது பணியினை நாங்கள் தொடர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

நன்றி தினமணி

Tuesday, February 7, 2017

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் யூனியன் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வீரண்ணன் வரவேற்று பேசினார். மறைந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.செந்தாமரையின் உருவப்படத்தை அகில இந்திய யாதவ மகாசபை தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் திறந்து வைத்தார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் பேசியதாவது:– அகில இந்திய யாதவ மகா சபை அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. யாதவ சமுதாயம் மற்ற சமுதாயத்துடன் ஒப்பிடும்போது பின்தங்காமல் முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் நமது உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். ராணுவத்தில் ஏற்கனவே இருந்த யாதவர் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். யாதவ சமுதாய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யாதவ மகா சபை செயல்பாடுகளில் பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். யாதவ இளைஞர் அமைப்பில் பெண்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வேலைவாய்ப்பு முகாம்

தொடர்ந்து மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:– தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள யாதவ சங்கங்கள் அகில இந்திய சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். ஒரே குடையின்கீழ் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1 கோடி யாதவர்கள் அகில இந்திய சங்க உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். யாதவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உழைக்கவேண்டும். நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் 20 கோடி யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு செலவு வழங்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாநில துணை தலைவர் என்ஜினீயர் கணேச கண்ணன், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாநில பொது செயலாளர் நீலமுரளி யாதவ், இளைஞரணி தலைவர் தினேஷ், தேசிய நிர்வாகிகள் நரேஷ், சுவப்பன்குமார், சோம்பிரகாஷ் யாதவ், சுந்தரவதனன், நாசே.ராஜேஷ், முருகானந்தம், பாலகிருஷ்ணன், குணா, பொட்டல்துரை உள்பட பலர் பேசினர்.இடஒதுக்கீடு

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாதவர்களுக்கு தமிழகத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வீரன் அழகுமுத்து பெயரை சூட்ட வேண்டும். ஜல்லிக்கட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும். ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். ராணுவத்தில் யாதவர் படைப்பிரிவை சேர்க்க வேண்டும். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். யாதவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தனித்தொகுதிகளை பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணேச கண்ணன் நன்றி கூறினார்.

Wednesday, December 21, 2016

தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சி கல்!


இடைச்சி கல்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.

இந்த பிரம்மாண்ட ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆலய பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சிவ தொண்டு செய்ய விரும்பினார்.

அவரது பெயர் அழகி என்பதாகும்.

இதையடுத்து அந்த மூதாட்டி, தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில் இருந்த சிற்பிகளின் தாகத்தை தணிக்கும் பொருட்டு,

தயிர் மோர் வழங்கி வந்தார். இதையறிந்த மன்னன் இராஜராஜசோழன் மூதாட்டியின் சிவா தொண்டினை அனைவரும் அறியும் வகையில்,

80 டன் எடை கொண்ட கல்லில் "அழகி" என பெயர் பொறித்து, அதனை இராஜ கோபுரத்தின் உச்சியில் இடம்பெற செய்ததாக கூறப்படுகிறது.

அந்த கல் இடைச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன்

பிரகதீஸ்வரின் மேல் விழுகிறதாம்.

நன்றி:Selva Murugan

தட்டச்சு:சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு

Saturday, December 10, 2016

ஆயர் விருதுகள் 2015

வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES






Tuesday, October 18, 2016

விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது

ஆயர் குல சொந்தங்களுக்கு வணக்கம்,











விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அந்த கோவில் மதில்சுவர் மற்றும் சில பணிகள் பண தட்டுப்பாட்டினால் தடைபட்டுள்ளது. யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது.




-------------------பகிரவும்--------------------
தொடர்புக்கு.
நாராயணன் யாதவ்
+91- 94442 85589

Tuesday, October 4, 2016

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோ.ம.க வேண்டுகோள்

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்து இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதையே உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இத்தனை ஆண்டுகளாக இதுகுறித்து எதுவுமே தெரிவிக்காத மத்திய அரசு, இப்போது ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றது; சட்டவிரோதமாகச் செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. துணைபோய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவே ஆதாரம்.
மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகம் மார்தட்டுவதற்கும், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கொக்கரிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவு தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடியாக வேண்டும்.
தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடடினயாக அமைக்க வேண்டும் என்று கோகுல மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

Saturday, October 1, 2016

யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar